December 31st, 2009 at 4:19am |
‘விடுமுறைக்கு ஹவாய் போகலாம்!’ என்று கண்ஸ்(ஹஸ்பண்ட்) சொன்ன போது எனக்கு ஹவாய் எந்தத் திசையில் இருக்கிறது என்று கூடத் தெரியாது. Oahu Revealed (Andrew Dougharty) என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டுவந்து கையில் கொடுத்து, ‘படிச்சி பார்த்து எங்க எல்லாம் போகலாம்னு நீயே ப்ளான் பண்ணுவியாம்’ என்று தனியாக விட்டுவிட்டார் நம்ம சரிபாதி..
வரலாற்றுப் புத்தகம், கம்ப்யூட்டர் புத்தகம், கதைப்புத்தகம் எல்லாம் படித்திருக்கிறேன். ஊர்சுற்றிப் பார்க்க புத்தகம் படிப்பது இது தான் முதன் முறை.. ஆனாலும் அந்த […]
Read the rest of ஒஆஹூ - Paradise of America
December 9th, 2009 at 4:42am |
“கல்யாணத்துக்கு அப்புறம் என்னை நீ சுத்தமா மறந்துட்ட.. ஒரு போன் கால் இல்ல, இமெயில் அனுப்பினா பதில் அனுப்ப மாட்டேங்கிறே.. என்னை மொத்தமா அவாய்ட் பண்றா மாதிரி இருக்கு!”
என்னடா நம்ம நினைச்சதை எல்லாம் ஒருத்தன் சொல்லி இருக்கானேன்னு யோசிக்கிறீங்களா? இதைச் சொன்னது வேற யாரும் இல்லை… என்னோட அருமைக் கணவனார் தான்.
திருமணம் முடிந்து நான் திரும்பிப் போனது நியூயார்க் நகரத்துக்கு. நண்பர்களில் பலர், திருமணமாகி நான் கணவனுடன் வாழ நியூயார்க் மாறி வந்துட்டதாக […]
Read the rest of மீண்டும்..
July 24th, 2009 at 3:47am |
ஆயிற்று, மூன்று மாதங்களாக திறக்கவே படாத பூக்கிரி.காம்.. அவ்வப்போது பதிவுகள் படித்தாலும், பெரிதாக இந்தப் பக்கம் வருவதில்லை என்பது தான் இன்றைய நிலை.. இந்த மூன்று மாதங்களுக்குள் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மைல்கல் வந்து போய்விட்டது.
‘இந்தியப் பயணம்’ என்ற சொல்லை நான் வாழ்நாளில் பயன்படுத்த மாட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.. இன்றைக்குக் கூட அந்தச் சொல் எனக்கு அந்நியமாகத் தான் இருக்கிறது. அமெரிக்கா வந்த புதிதில் நண்பர்கள் பலர் பல நாள் […]
Read the rest of ‘இந்தியப் பயணம்’