July 4th, 2007 at 12:12pm |
1. நான் பதிவுகளுக்கு வரும் போது நாலு விளையாட்டு ஓடிக் கொண்டிருந்தது. நாலு விளையாட்டால் எனக்குத் தெரிந்த ஆகப் பெரிய நன்மை, புதுப் புது தள முகவரிகளை அதன்மூலம் பெற முடிந்தது.. அப்புறம் பொறுமையாகத் தான் தமிழ்மணம் போன்ற திரட்டிகளைக் கண்டுபிடித்தேன்.
2. அப்புறம் யாரோ ஆறு விளையாட்டு ஒன்றை ஆரம்பித்தார்கள். ஆறு விளையாட்டின் போது வழக்கம் போல ரணகளமாக இருந்த பதிவுலகம் மெல்ல இயல்புக்குத் திரும்பியது. (இங்க இயல்பே அதானேங்கிறீங்களா? )
3. ஆறுக்கும் நாலுக்கும் […]
Read the rest of எட்டு ஒன்பது பத்து
May 17th, 2007 at 11:29am |
‘வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்தில் வீடு வாங்கிவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.’ என்று சமீபத்தில் எங்கோ படித்த நினைவு.. நிஜத்தில் எப்படியோ, மெய்நிகர் உலகமான இணையத்தில் சொந்த வீடு சுலபமான விசயம் தான் என்பது வாங்கிப் போட்டபோது தான் தெரிந்தது..
கூகிளின் தீவிர விசிறியாதலால், கூகிள் ஆப்ஸ் மூலம் முதலில் தளம் வாங்கிப் போட்டாச்சு.. ஆனால் வோர்ட்பிரஸ் மென்பொருளுக்குத் தான் அதில் இடமிருக்கவில்லை
சரியென்று, உள்நாட்டு இடம்வழங்கித் தளமான தமிழாவிடமிருந்து இடம் வாங்கி ஒருவழியாக மென்பொருளும் நிறுவியாச்சு..
பழைய இடுகைகளுக்குத் […]
Read the rest of கெளம்புறேங்க..
March 9th, 2007 at 10:53am |
சுடர் தொடங்கிய பொழுது சாகரனிடமிருந்து ஒரு மடல் வந்திருந்தது. அதுவே அவருடனான கடைசி பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. வெகுநாள் ஆகிவிட்ட போதும், அவர் நம்மிடையே இல்லை என்பதை இன்றும் நம்ப முடியவில்லை. “இன்றில்லை என்னும் பெருமை” உடைத்த உலகம் என்பதன் பொருளை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது நான் படிக்கும் ஒவ்வொரு சுடரும்; என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள் சாகரன்…
மங்கை கையில் சுடர் போன போது அங்கிருந்து வேறு யாருக்காவது போகும் என்று நினைத்திருந்தேன். […]
Read the rest of அம்பாரியில் வந்த சுடர்