pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

Confessions of a Shopaholic

சின்ன வயதிலிருந்து எனக்குப் பழக்கமான ஒரே நல்ல வழக்கம் புத்தகம் படிப்பது. கடந்த ஒரு வருடமாக அந்தப் பழக்கம் கூட என்னைவிட்டுப் போய்விட்டதோ என்று ஒரு தீவிர சந்தேகம் எனக்கு! எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் படிக்க முடியாமல், என்னவோ படிப்பது என்ற பழக்கமே இல்லாமல் போய்விட்ட ஒரு உணர்வு. நல்ல வேளையாக எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் படிக்கும் வேகம் என்னுள் இன்னும் இருக்கிறது என்று நிருபிக்கும் வகையாக […]

Read the rest of Confessions of a Shopaholic

போட்டி முடிவுகள்: விடை தேடும் வினா? :

நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா?
அல்லது
நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல நமது பதிவுகளா?

போன முறை போல் தலைப்பில் சில நெருடல்கள் இருந்தன. விவாதிப்பவர்கள் கண்டிப்பாகச் சுட்டிக் காட்டுவார்கள் என்று நாங்களும் விட்டுவிட்டோம். இது போன்ற தலைப்பின் கருத்துக் குழப்பங்களையும் சேர்த்துச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் பங்கு கொள்ளும் பொழுது தான், இந்த விவாதங்கள் சரியான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.
எனவே, […]

Read the rest of போட்டி முடிவுகள்: விடை தேடும் வினா? :

தமிழ் பேசு தங்கக் காசு

மக்கள் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி “தமிழ் பேசு தங்கக் காசு“. பழைய சொல் விளையாட்டு போன்ற இந்த நிகழ்ச்சியைப் புது மெருகுடன் நடத்துபவர் ஜேம்ஸ் வசந்தன். தனித்தமிழ் விளையாட்டாக இருக்கிறது.
மொத்தம் மூன்று சுற்றுக்கள். முதல் சுற்றில் வெல்பவர்களுக்கு ஒரு தங்கக் காசும் ஆயிரம் ரூபாய் பணமும். அடுத்தடுத்த சுற்றுகளில் பரிசுப் பொருட்கள் இரட்டிப்பாகின்றன. ஆக மொத்தம் ஆறு தங்கக் காசுகள், தமிழ் பேச. மற்ற சேனல்களின் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு [தமிங்கிலம் என்று சொல்லும் அளவுக்குக் கூட இப்போ […]

Read the rest of தமிழ் பேசு தங்கக் காசு