pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

பிரகாஷுக்கு நன்றி

இப்பவெல்லாம் படம் பார்க்க அவ்வளவு நேரம் இருப்பதில்லை, ஆனா சின்ன வயதில் அதாவது 2000வது வருடம்வரை, அதற்கு முன்னால் வெளியான எல்லா படங்களையும் பார்த்திருப்பேன் என்றே நினைக்கிறேன். எத்தனை மொக்கை படமாக இருந்தாலும் சின்னத்திரையில் வரும் எல்லா குப்பையையும் படிக்கிற காலத்தில் பார்த்திருக்கிறேன். சீரியல்கள் பார்க்கும் ஆர்வம் குறைவு என்பதால் படம் பார்ப்பது பிடித்த பொழுதுபோக்கு. சில படங்களை என் அம்மா ரொம்ப அதிக சோகம் என்று தடை செய்திருந்தார்கள் (துலாபாரம் போல) அவற்றைக் கூட அவர் […]

Read the rest of பிரகாஷுக்கு நன்றி

பதிந்ததில் பிடித்தது

நான் தொடர்ச்சியா பதிவுகள் படிச்சி, எழுதி ரொம்ப காலமாச்சு.. போன முறை, 2006இல் இங்க அமெரிக்கா வந்திருந்த போது, கிட்டத் தட்ட எல்லா நாளும் பதிவுகளோட தான் கழிச்சிருக்கேன். அப்போ தமிழ்ப்பதிவுகளைக் கண்டுபிடிச்ச புதுசு… ஒரு வாரம் ஒரு பதிவர் வீதம் யாராவது ஒரு பதிவரை எடுத்துகிட்டு அவங்க எழுதின கிட்டத் தட்ட எல்லா இடுகைகளையும் படிச்சி முடிக்கிறதை ஒரு முழுநேர தொழிலாவே வச்சிருந்தேன்னு சொல்லலாம்.
இப்ப நிலைமை வேற.. கொஞ்சம் இல்ல, முழுக்கவே ஒதுங்கியாச்சு. யாராவது […]

Read the rest of பதிந்ததில் பிடித்தது

ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்…

கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:

யோசிப்பவர்
முத்துலட்சுமி
முத்துகுமரன்
திரு

முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று

1. புத்தகம் வாசிப்பது: வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் […]

Read the rest of ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்…