pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

தேடல் தொடர்கிறதே

நான் பத்தாவது முறையாக அந்தத் தாளைப் படித்தேன்.
DR. சிவகுமார்,9, பதி தெரு, சேத்துப் பட்டு,சென்னை.
‘கோழி ஒன்றைப் பிடித்து, அது கதறக் கதற, அதன் கால்களை மை டப்பாவுக்குள் அழுத்தி, அதன் பின் அந்த பார்சலில் ஓட விட்டிருப்பார்களோ?’ என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த அளவுக்குக் கோழிக் கிறுக்கல் என்ற பதத்திற்கே விளக்கமாக இருந்தது அந்த முகவரி. ஒன்பதாம் எண் வீடு தானா என்று பலமுறை சோதித்துவிட்டுக் கேட்டால், “இங்க செவக்குமாரு, செபக்குமாருன்னு யாரும் இல்லீங்களே..” […]

Read the rest of தேடல் தொடர்கிறதே

சுஜாதா (குமுதம் சிறுகதை)

[இன்றைக்குத் தமிழ்ப் பதிவுலகில், மிக மிக சூடாக விற்பனை ஆகிக் கொண்டிருப்பது சுஜாதாவின் சிறுகதை தான். அதான், நானும் ஒரு பதிவு போடலாமே என்று.. தொடர்புள்ள சுட்டிகள்: சிறுகதை-1 சிறுகதை-2 ]
“ஏய்! உங்கப்பன் வீட்டுக்குப் போய் மோதிரம் வாங்கிட்டு வான்னு சொன்னேன் இல்ல?” கணவன் சுந்தருக்கு இவ்வளவு கோபம் கூட வரும் என்று சுஜாதா எதிர்பார்க்கவே இல்லை.
“நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்பத் தான் வீட்டை வித்து கலாவுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க. இப்பப் போய் […]

Read the rest of சுஜாதா (குமுதம் சிறுகதை)

ஒரு நிமிடக் கதை?

“டேய்! இது தப்புடா!” பெண்பார்க்க வந்த இடத்தில் இராம்குமாரின் தந்தை அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
“என்னப்பா தப்பு? நான் தானே கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன்? எனக்கு யாரைப் பிடிக்குதோ அவளைத் தானே கட்டிக்க முடியும்?” ராம் சீறினான்.
“மாப்பிள்ளை என்ன சொல்றாரு?” தீபாவின் அப்பா, இன்னும் மாமனார் ஆகாதவர், கேட்டார்.
“வந்து..” அப்பா மென்று முழுங்கிக் கொண்டிருக்க, ராம் போட்டு உடைத்தான்
“நான் சொல்றேன் சார். எனக்கு உங்க ரெண்டாவது பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு!” கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.
“இப்போ சின்னவளுக்குக் கல்யாணம் செய்யுறதா […]

Read the rest of ஒரு நிமிடக் கதை?