February 7th, 2009 at 3:26am |
சின்ன வயதிலிருந்து எனக்குப் பழக்கமான ஒரே நல்ல வழக்கம் புத்தகம் படிப்பது. கடந்த ஒரு வருடமாக அந்தப் பழக்கம் கூட என்னைவிட்டுப் போய்விட்டதோ என்று ஒரு தீவிர சந்தேகம் எனக்கு! எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் படிக்க முடியாமல், என்னவோ படிப்பது என்ற பழக்கமே இல்லாமல் போய்விட்ட ஒரு உணர்வு. நல்ல வேளையாக எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் படிக்கும் வேகம் என்னுள் இன்னும் இருக்கிறது என்று நிருபிக்கும் வகையாக […]
Read the rest of Confessions of a Shopaholic
November 9th, 2007 at 9:24pm |
சென்னையில் இருந்த காலங்களில் ஏனோ மாவட்ட பொது நூல் நிலையங்களைப் பற்றி எல்லாம் யோசித்ததில்லை. நூலகங்களை அறிமுகப்படுத்தவேண்டிய எங்கள் பள்ளியிலோ, பள்ளிப் பாடங்களைத் தவிர மற்றவற்றைத் தொட்டுப் பார்ப்பதும் பாவமாக கருதப்பட்டது. இந்த ஊரில் ஒவ்வொரு தொகுதியிலும் நூலகங்கள் இருப்பதும் அவை பொதுவான அந்த வட்ட நூலகத்துடன் இணைந்து பணியாற்றுவதும் என்று நல்ல நூலகப் பின்னலாக கொஞ்சம் வியப்பேற்படுத்துவது உண்மை.
ஐஐடி நூலகத்தில், மிஞ்சி மிஞ்சிப் போனால் இருக்கும் புத்தகப் பட்டியலைச் சேமிக்கவும் அதில் தேடவும், ஒரு […]
Read the rest of அடங்க மாட்டம்ல!
April 16th, 2007 at 1:08pm |
எரிக் சேகல்(Erich Segal) எனக்கு அறிமுகமானது “லவ் ஸ்டோரி”(Love Story) புத்தகம் மூலம். அழகான, ஆற்றொழுக்கமான நடையுடனும் தெளிவான கதையோட்டத்துடனும் போகும் அந்தக் கதை கிட்டத்தட்ட நம் தமிழ் சினிமா மாதிரி தான். ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் வாசித்த புத்தகம் அது. உண்மையைச் சொல்வதானால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கல்லூரிகளின் பெயர்கள் தொடங்கி, பல விசயங்கள் எனக்குப் புதிது. ஆனாலும், அந்தப் புத்தகம் நான் ரசித்துப் படித்த கதைகளில் ஒன்றாகிவிட்டது. லவ் ஸ்டோரியும் சரி, […]
Read the rest of ACTS OF FAITH - நம்பிக்கைகளின் செயல்கள்.