pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

இந்தக் கதை தெரியுமா?

பார்த்ததில் கேட்டதில், படித்ததில் ரசித்தது என்ற பழைய தொடர்விளையாட்டின் போது கேட்டது என்ற தலைப்பில் நான் குறிப்பிட்டிருந்த கதையைச் சொல்லச் சொல்லி கோரிக்கை வைத்திருந்தார் இலவசக்கொத்தனார்.
அப்போது இப்படி பேசிப் பதிவு செய்வதற்கு சுலப வழியெல்லாம் தெரிந்திருக்கவில்லை.. அதனால் அப்படியே நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். இப்போ தான் பாட்டு பாடுவதே ஒரு பகுதி நேர தொழில் மாதிரி ஆகிக் கொண்டிருக்கையில், இந்த விசயத்தையும் பேசிவிடுவோமே என்று….

குழந்தைகளுக்கு ஒரு நினைவுப் பயிற்சியாகவும், உச்சரிப்பு பயிற்சியாகவும் சொல்லிக் கொடுக்கப்பட்ட […]

Read the rest of இந்தக் கதை தெரியுமா?

தம்பிக்கு… (சிறுகதை)

“என்ன ரேங்க்டா?” என்றார் அப்பா, பாலு நீட்டிய பிராக்ரஸ் ரிப்போர்ட்டைக் கையில் வாங்கியபடியே.
“ரெண்டாவதுப்பா” ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியுடன் சொன்னான் பாலு.
“ம்ம்ம்.” என்று பதில் சொன்ன அப்பாவின் குரலில் அதிகம் சுரத்தே இல்லை.
“ராமுவை விட ரெண்டு ரேங்க் முன்னால் எடுத்திருக்கேன்பா..” அவசர அவசரமாக பாலு சொல்லவும், அப்பா எந்தவித உணர்ச்சியுமில்லாமல் தலையாட்டினார்.
“சரி சரி, உள்ளே வந்து கைகால் கழுவிகிட்டு பலகாரம் சாப்பிடுப்பா” என்று அம்மா அன்போடு அழைக்கவும் பாலு சோர்வு பொங்க உள்ளே போனான்.
“இன்னைக்கும் இட்லி தானா? அதுக்கு […]

Read the rest of தம்பிக்கு… (சிறுகதை)

தம்பி

“அப்பா! எனக்கு ஒரு வாட்ச் வேணும்பா!” தயங்கித் தயங்கித் தன் வேண்டுகோளைத் தந்தை முன் வைத்தான் கோபி.
“பள்ளிக்கூடத்தில் படிக்கிற பையனுக்கு வாட்செல்லாம் எதுக்குடா?” அப்பாவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் கோபி காணாமல் போயிருந்தான்.
“அப்போ, மேசை மேல வச்சிருந்தாரே அந்த வாட்ச் யாருக்கு?” என்று அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது
அன்றே அந்தக் கடிகாரத்தைப் பக்கத்து வீட்டு பாலுவுக்கு அவன் தந்தையே அழைத்துக் கொடுப்பதைப் பார்த்த போது கோபிக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.

பாலுவும் கோபியும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். […]

Read the rest of தம்பி