pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

நீலக் குழந்தை..

இதயத்தில் ஏதோ பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகளை நீலக் குழந்தைகள் என்று அழைக்கிறார்கள் என்று மட்டுமே கேட்டிருக்கிறேன். ஏதோ, கெட்ட ரத்தம், நல்ல ரத்தத்தைச் சரியாக பிரிக்காமல் இதயம் பிரச்சனை செய்யும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் அது போன்றதொரு குழந்தையை நேரில் காண நேரிடும் என்று நினைத்திருக்கக் கூட இல்லை..

குழந்தை ப்ரியதர்ஷினியின் அறுவை சிகிச்சைக்கு உதவி தேவை என்ற மடல் வந்த போது, உடனுக்குடன் நினைவுக்கு வந்தது என்றென்றும் அன்புடன் பாலா தான். பாலா ஏற்கனவே […]

Read the rest of நீலக் குழந்தை..

ஆண்களுக்காக…

ஆண்களின் ஆபத்தை நீக்க அவர்களது உறவு/நட்புப் பெண்கள் விளக்கேற்ற வேண்டும் என்று வதந்தி ஒன்று பரவி வருவதாக நண்பர் இட்லிவடை கூறியுள்ளார்.
பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையிலேயும், வலைபதியும் பெண் தோழிகள் விளக்கேற்றினால், தனக்கு நன்மை என்று நம்பும் எங்களின் நண்பர்களுக்காக, விளக்கேற்றுவது அவர்களின் நம்பிக்கையையும் துணிவையும் அதிகப்படுத்தும் என்பதால் விளக்கேற்றத் தொடங்குவோம்.
தற்போது வலைபதியும் ஆண்களுக்காக மட்டுமன்றி இனிமேல் வலைபதியப் போகும் சிறுவர்களுக்கும் உதவும் வகையில் சிறார் போர்னோகிராபிக்கும் எதிராக குரல் கொடுப்போம்.
வாருங்கள் தோழிகளே.. விளக்கேற்றுவோம்.
உங்களின் ஒவ்வொரு மெழுகுவர்த்தியும், ஒரு […]

Read the rest of ஆண்களுக்காக…

தண்ணீருக்காக ஒரு ஓட்டம் - மதுரக்காரய்ங்க கவனிக்க

இப்போதெல்லாம் விழிப்புணர்வு மராத்தான்கள் காலத்தின் கட்டாயமாகிக் கொண்டிருக்கின்றன - ஹைதராபாத் 10K ரன், பெங்களூர் 5K ரன், மும்பை மராத்தான் என்ற விழிப்புணர்வு ஓட்டங்களின் வரிசையில் வருகிறது மதுரை மராத்தான்.பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த நீராதாரங்கள் இப்போது சுருங்கிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் மதுரை போன்ற பெருநகரங்களில், தண்ணீர் சிக்கனத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட மிக மிகக் குறைவாக உள்ள காலகட்டத்தில், மதுரை மராத்தான் போன்ற ஓட்டங்கள் அந்த நிலையை மாற்ற பெரிதும் பயனுள்ள வழிமுறைகளாக உள்ளன.

தான் […]

Read the rest of தண்ணீருக்காக ஒரு ஓட்டம் - மதுரக்காரய்ங்க கவனிக்க