October 10th, 2006 at 10:38am |
திடீரென்று இப்படி ஒரு நிலை வரும் என்று அனு நினைக்கவே இல்லை. அன்பான கணவன், முத்தாக இரு குழந்தைகள். கணவரே நிர்வகிக்கும் சொந்த நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் மனதிற்குப் பிடித்த வேலை. அழகிய ஆறு போல் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியை எல்லாம் ஒரே இரவில் அழித்துச் சென்றது அனுவின் கணவர் ரோஹின்டனின் திடீர் மரணம்.
கணவர் மரணத்தைத் தொடர்ந்து பதினான்கே மாதங்களில் ஒரே அன்பு மகன குரூஸும் விபத்தில் இறந்து போக, துக்கத்தில் அமிழ்ந்து போக […]
Read the rest of அனு அகா - துணிவே துணை
April 26th, 2006 at 6:23pm |
பக்கத்தில் படத்தில் வெள்ளந்தியாக சிரிக்கும் சின்னபிள்ளை உண்மையிலேயே கல்வியின் கறைகூட படியாத கிராமத்துப் பெண்மணி. சாதனைப் பெண்டிர் பக்கத்தில் வருமளவிற்கு இவர் என்ன செய்தார் என்ற கேள்வி எழுவது இயல்பே.
சின்னபிள்ளை 1999ஆம் வருடம், இந்திய அரசால் சமூக முன்னேற்றத்திற்கு உதவிய பெண்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த விருதான ஸ்திரீ சக்தி விருதினைப் பெற்றிருக்கிறார்.இந்திய அரசின் விருது பெறுவதெல்லாம் ஒரு பெரிய செய்தியா என்பவர்களுக்கு சின்னபிள்ளையின் கதையை அடியிலிருந்து சொன்னால் தான் புரியும்.
ஆறு சகோதர சகோதரியர் இருக்கும் ஏழைக் குடியானவர் […]
Read the rest of சக்திக் களஞ்சியம் சின்னபிள்ளை
April 21st, 2006 at 6:20pm |
1978. விஜயா பாங்க் அலுவலகம்.
“என்னிடம் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. தனியாகத் தொழில் தொடங்குவதற்கு கடன் வேண்டும்”
நிமிர்ந்து பார்த்த சிப்பந்தி அதிர்ந்தார். எதிரே நின்றிருந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு இருபத்தி ஐந்து வயதுக்குள் தான் இருக்கும். எண்பதுகளில், தனியே தொழில் தொடங்க ஆண்களே தயங்கிய நேரம். இத்தனை சின்னப் பெண், எந்த நம்பிக்கையில் வந்து கேட்கிறாள்?!!
“என்ன தொழில்? சமையல் சம்பந்தப்பட்டதா? இல்லை ஏதேனும் ஆரம்ப நிலைப் பள்ளியா? ” என்றார் அவர்
“இரண்டும் இல்லை. என்ஸைம்ஸ் எனப்படும் நுண்ணுயிர்களை வளர்க்கும் […]
Read the rest of பயம் என்பது பயனற்றது