pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

பதிந்ததில் பிடித்தது

நான் தொடர்ச்சியா பதிவுகள் படிச்சி, எழுதி ரொம்ப காலமாச்சு.. போன முறை, 2006இல் இங்க அமெரிக்கா வந்திருந்த போது, கிட்டத் தட்ட எல்லா நாளும் பதிவுகளோட தான் கழிச்சிருக்கேன். அப்போ தமிழ்ப்பதிவுகளைக் கண்டுபிடிச்ச புதுசு… ஒரு வாரம் ஒரு பதிவர் வீதம் யாராவது ஒரு பதிவரை எடுத்துகிட்டு அவங்க எழுதின கிட்டத் தட்ட எல்லா இடுகைகளையும் படிச்சி முடிக்கிறதை ஒரு முழுநேர தொழிலாவே வச்சிருந்தேன்னு சொல்லலாம்.
இப்ப நிலைமை வேற.. கொஞ்சம் இல்ல, முழுக்கவே ஒதுங்கியாச்சு. யாராவது […]

Read the rest of பதிந்ததில் பிடித்தது

பதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்

இப்போது முதல், இன்னும் சிலகாலத்துக்கேனும் பின்னூட்டங்கள் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பொன்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு பதிவர் உருவாகி இருப்பதே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம்.
தோழி ஒருவர் அழைத்து, “பொன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய ப்ரோபைல் ரெடியாகிறதே, பார்த்தாயா?” என்று கேட்டபொழுது, “அப்படியா!” என்று வியக்கத்தான் முடிந்தது.
பெண்களுக்கெதிரான வன்முறை மிகச் சுலபமாகக் கைவரக் கூடியது. அதிலும், நட்புரீதியாக கை நீட்டுபவர்களுடன் மிக இயல்பாகக் குலுக்கிவிடும் மனமுடைய என்னைப் பற்றி என்மூலமே திரட்டப்பட்ட தனிப்பட்ட தகவல்களுடனான […]

Read the rest of பதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்

ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்…

கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:

யோசிப்பவர்
முத்துலட்சுமி
முத்துகுமரன்
திரு

முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று

1. புத்தகம் வாசிப்பது: வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் […]

Read the rest of ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்…