March 31st, 2006 at 8:31am |
சென்னையிலிருந்து டெல்லி, பூனா எல்லா இடமும் சுலபமாகப் போய்விடலாம். பெங்களூர் போகத் தான் ஒரே அடிதடி. அதிலும் பாருங்கள், வெள்ளி இரவு, ஞாயிறு மாலை என்றால், இரண்டு பக்கமும் பேருந்து, தொடர்வண்டி என்று எதுவும் கிடைக்காது. நான் வழக்கமாக முன்னமேயே பதிவு செய்து விடுவேன், இந்த அனுபவத்திற்குப் பிறகு.
அந்த வாரம் திங்கள் விடுமுறை. அந்தத் திங்கள் தான் சென்னையின் சரி பாதி ஜனத்தொகை பெங்களூர் போகிறது போலும், எனக்கு ஊர் திரும்ப டிக்கெட் கிடைக்கவில்லை. பேருந்தோ, தொடர்வண்டியோ […]
Read the rest of மெட்ராஸ் டு பெங்களூர்
March 30th, 2006 at 8:08am |
இந்தமுறை எப்படியும் சாராவைக் கொன்று விட வேண்டும்.. ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணத்தால் தட்டிக் கொண்டே போகிறது…
யோசித்துக் கொண்டே வந்த என்னைப் பார்த்து “சலாம் மேம்சாப்” வாசலில் இருந்த செக்குரிட்டி வியப்புடன் சொன்னான்.
பதில் வணக்கம் சொன்னதும், “என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்கள்” என்று கேட்டான் ஆங்கிலத்தில்.
“தலைவலி” என்றேன் பதிலுக்கு.
அடுக்குமாடிக் கட்டிடத்தில் குடியிருந்தால், இது ஒரு தொல்லை. நான் எப்போது அலுவலகத்திலிருந்து வந்தால் இவனுக்கு என்ன!!!!
“என்னம்மா, திடீர்னு தலைவலி? “
அந்தக் குடியிருப்பில் இருக்கும் ஒரு தமிழ்க்காரப் பாட்டி. இரவு […]
Read the rest of இந்தமுறை எப்படியும்…
March 24th, 2006 at 2:35pm |
எனக்கும் உனக்குமானஉறவின் நடுவில்இன்னொருவன்…
எப்படி அனுமதித்தாய் நீ??
மஞ்சள் மாலையில்,மெல்லிய குளிரில்,கைப்பிடித்து நேசம்சொன்னபோது இல்லை அவன் நம்மிடையே!!.
இப்போது“அவனுக்குப் பிடிக்கவில்லை.கையை விடு!!!” என்கிறாய்….
நிலவின் ஒளிகூட இல்லாதஓர் இரவில்அலையொலிகளுக்கிடையில்வருடந்தோறும்நீ பிறந்த நாளில்,அலையைப் பார்க்க வருவோம்”என்று சொன்னவள் நீதான்.
இன்று சொல்கிறாய்,“அவனுக்குத் தெரியாமல் போனால் கோபிப்பான்;சொல்லிவிட்டுப் போனால் சண்டைக்கு வருவான்” என்று!!!!
எனக்கும்உனக்குமானஉறவின் நடுவில்இன்னொருவன்…
எப்படி அனுமதித்தாய் நீ??
நடுநிசியில்,பெருங்கோபமும்,உன்மேல்கோபம்காட்டி அறியாத இயலாமையும்சேரநான் சுவர் பார்த்துபடுத்திருக்கையில்,அவன் அறியாமல்,என்னருகே வந்து,“பொறாமையா? ..உன் மகன் அல்லவா?” …என்று சொல்லும்போதுஒற்றைப் புன்னகையில்,உயிர் கரைந்து சொல்கிறேன்,“நானும் உன் மகன் தானே??!!!”
கவிதைன்னு நெனைச்சு தான் எழுதினேன்.. எப்படி […]
Read the rest of இன்னொருவன்