pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

வெயிலோடு போய்

சவுத் ஏசியன் புக்ஸ் வெளியீடான ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “வெயிலோடு போய்” புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (முதல் பதிப்பு 1985. நான் படித்தது மூன்றாவது பதிப்பு 1994) [ச.தமிழ்ச்செல்வனைப் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு பத்ரியின் மறுமொழியில் பார்க்கலாம்.]
ஏற்கனவே தமிழ்ச்செல்வனின் “அரசியல் எனக்குப் பிடிக்கும்” படித்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் தொடக்கப் பகுதிகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, ஓட்டு போடுவது மட்டுமே அரசுக்கும் பொது மக்களுக்குமான தொடர்பு என்ற என் பழைய […]

Read the rest of வெயிலோடு போய்

குழந்தைத்தனமான ஒரு ஆசை…

காலையிலிருந்தே இதோ, ‘இப்போ வருவேன்’, ‘அப்போ வருவேன்’ என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருந்த மழையைத் தைரியமாக எதிர்த்துக் கொண்டே, கோயம்பேடு காய்கனி அங்காடிகளுக்குச் சிற்றுலா சென்ற போது மதிய உணவுக்குத் திரும்பிவிடலாம் என்பது மாதிரியான நேரம் தான். மார்க்கெட்டின் சிறுவியாபாரிகள் கடைகள் எல்லாவற்றையும் ஒரு சுற்று நோட்டம் விட்டுவிட்டு அன்றைக்குப் பச்சையாக புதிதாகத் தோன்றும் காய்களை மட்டுமே வாங்குவது எங்கள் வழக்கம்.
வெங்காயக் கடையில் சாம்பார் வெங்காயத்துக்கும் பெரிய வெங்காயத்துக்குமான விலைப்பேரம் பேசிக் கொண்டிருந்த போது […]

Read the rest of குழந்தைத்தனமான ஒரு ஆசை…

பதிவுலகில் பெண்கள்?!

“தமிழ்ப் பதிவுலகுல பார்த்தீங்கன்னா பொன்ஸ், பெண் பதிவாளர்கள் ரொம்ப குறைவு”
- எழுத வந்த ஐந்தாம் மாதம் பல்வேறு காரணிகளால், ‘மூட்டை கட்டலாம்’ என்று நான் முடிவு செய்திருந்த போது மதி சொன்னது எனக்கு.
உண்மை தான்; பதிவுலகில் பெண் பதிவாளர்களின் எண்ணிக்கைக் குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் தொடர்ந்து இயங்குபவர்கள் மிகமிக சொற்பம். வீட்டளவில் பேசுவதற்கே போன நூற்றாண்டு வரை அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள், பொது ஊடகங்களில் பேச இன்னும் அதிகமான தடைகள் வந்து உட்கார்ந்து கொள்கின்றன.

ஆபாச வார்த்தைகளில் […]

Read the rest of பதிவுலகில் பெண்கள்?!