December 30th, 2006 at 1:18pm |
பழைய ப்ளாக்கர் பீட்டாவான இன்றைய ப்ளாக்கருக்கு மாறுவதில் உள்ள பிரச்சனைகள், பயங்கள் பற்றிய மணியனின் பதிவைப் பார்த்த பின்னால், இந்தப் பதிவை இடவேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவு பீட்டாவுக்கு மாறிய பின்னால் உங்களின் வார்ப்புரு மாற்றத்தைச் சுலபமாக்கும் பதிவு.
இதோ, பீட்டாவுக்கு மாறலாம் வாங்க…
பகுதி 1: வார்ப்புரு மாற்றம்நிலை 1: உங்களின் பதிவை புது ப்ளாக்கருக்கு மாற்றும் முன்னர், உங்களின் பழைய வார்ப்புருவைப் படியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நிலை 2: புது ப்ளாக்கருக்கு மாறுங்கள் என்ற சுட்டி ஒன்று […]
Read the rest of புது ப்ளாக்கருக்கு மாறலாம் வாங்க..
December 29th, 2006 at 12:32pm |
தினம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள், பின்னூட்டங்கள் என்று வந்து கொண்டே இருக்கும் தமிழ்ப் பதிவுலகில், கில்லி போன்ற மனித திரட்டிகளின் பங்கு ஆழமானது.
அமெரிக்கா, அரசியல், உலகம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஒரு இடுகையைப் பரிந்துரைப்பதாகட்டும், ஒரு நாளைக்கு வரும் இடுகைகளிலிருந்து பலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதாகட்டும், இவர்களின் தன்னார்வச் சேவை நிச்சயம் பாராட்டிற்குரியது.
கில்லியின் “தமிழில் எழுதுவது எப்படி?” போன்ற பதிவுகள் புதிதாக பதிவெழுத வரும் எல்லாருக்கும் ஒரு வரம் என்றால் மிகையல்ல.
சரி, பில்டப் போதும்.. என்னை இங்கே […]
Read the rest of கில்லி 365 - ஒரு வாசிப்புரை
December 29th, 2006 at 11:15am |
“அப்பா! எனக்கு ஒரு வாட்ச் வேணும்பா!” தயங்கித் தயங்கித் தன் வேண்டுகோளைத் தந்தை முன் வைத்தான் கோபி.
“பள்ளிக்கூடத்தில் படிக்கிற பையனுக்கு வாட்செல்லாம் எதுக்குடா?” அப்பாவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் கோபி காணாமல் போயிருந்தான்.
“அப்போ, மேசை மேல வச்சிருந்தாரே அந்த வாட்ச் யாருக்கு?” என்று அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது
அன்றே அந்தக் கடிகாரத்தைப் பக்கத்து வீட்டு பாலுவுக்கு அவன் தந்தையே அழைத்துக் கொடுப்பதைப் பார்த்த போது கோபிக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.
பாலுவும் கோபியும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். […]
Read the rest of தம்பி