February 24th, 2007 at 10:56am |
இதயத்தில் ஏதோ பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகளை நீலக் குழந்தைகள் என்று அழைக்கிறார்கள் என்று மட்டுமே கேட்டிருக்கிறேன். ஏதோ, கெட்ட ரத்தம், நல்ல ரத்தத்தைச் சரியாக பிரிக்காமல் இதயம் பிரச்சனை செய்யும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் அது போன்றதொரு குழந்தையை நேரில் காண நேரிடும் என்று நினைத்திருக்கக் கூட இல்லை..
குழந்தை ப்ரியதர்ஷினியின் அறுவை சிகிச்சைக்கு உதவி தேவை என்ற மடல் வந்த போது, உடனுக்குடன் நினைவுக்கு வந்தது என்றென்றும் அன்புடன் பாலா தான். பாலா ஏற்கனவே […]
Read the rest of நீலக் குழந்தை..
February 19th, 2007 at 10:46am |
“இதுக்கு என்ன முடிவுனு தெரியல”
வெட்டிப்பயலின் பதிவு முன்வைக்கும் கேள்விகளுக்கு என்னாலான பதில்கள் இந்தப் பதிவு:
வெட்டி,
உங்க பிரச்சனையின் முலக் காரணம் என்ன என்கிறதை நீங்க சரியாகப் புரிந்து கொண்டது போல் தான் தோணுது. வேலையில் சேர்ந்த புதிதில், அதாவது, முதல் ஆறு மாதங்களுக்கு அதிக நேரம் அங்கேயே இருந்து பழகி இருக்கீங்க; பழக்கி இருக்கீங்க - உங்க மேலதிகாரிகளுக்கு உங்களின் அதிக நேர இருப்பைப் பழக்கி இருக்கீங்க.
இது […]
Read the rest of வெட்டி, நோ டென்சன் ப்ளீஸ்
February 12th, 2007 at 9:56am |
காலை அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தவுடன் தலை பாலபாரதியிடமிருந்து அந்தத் துக்ககரமான தொலைபேசிச் செய்தி… தேன்கூடு நிறுவனரும், தமிழார்வலருமான சாகரன் என்னும் கல்யாண் அவர்களின் மரணச் செய்தி !
29 வயதெல்லாம் மாரடைப்பு வரும் வயதா என்ன?! கொடுமை!
அதிகம் பழகியதில்லை என்றாலும், சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்புக்கு இனிப்புகளுடன் வந்து இனிமையாக கலந்து கொண்ட கல்யாண் இன்று நம்மிடையே இல்லை என்பதை நம்பவே முடியவில்லை!
தமிழோவியத்துடன் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுக்கான தேர்வு முறைகள் அத்தனை நேர்த்தியாக இல்லை என்ற […]
Read the rest of சாகரனுக்கு அஞ்சலி….