April 28th, 2007 at 1:46pm |
புரட்சிப் புரோக்ராம்மர் குழலி, கருவிப்பட்டை சேர்க்கும் பக்கத்தை வெளியிட்டதிலிருந்தே, அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். களத்துமேட்டில் நிறைய வேலை இருப்பதாக சொல்லியே நழுவிக் கொண்டிருந்ததால், நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோதிச்சு பார்க்கிறதுன்னு இறங்கியாச்சு.
கணினியில் எனக்குப் பிடிக்காத மொழி என்றால் அது ஜாவா ஸ்க்ரிப்டிங் தான். HTML, ஜாவா ஸ்க்ரிப்டிங், சுலபமாக இருப்பதாலோ, அல்லது தனக்கு என்ன பிரச்சனை என்று தானே சொல்லத் தெரியாத குழந்தையாகவே இருப்பதாலோ, நான் முறையாக கற்காத […]
Read the rest of பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவை
April 23rd, 2007 at 4:49pm |
சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், “தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?” என்றார்.
“இந்த வெயிலிலா?” என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன்.
சாகரன் தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து சென்னபட்டினம் குழு சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.
அடுத்து, சிறில் […]
Read the rest of சென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்
April 16th, 2007 at 1:08pm |
எரிக் சேகல்(Erich Segal) எனக்கு அறிமுகமானது “லவ் ஸ்டோரி”(Love Story) புத்தகம் மூலம். அழகான, ஆற்றொழுக்கமான நடையுடனும் தெளிவான கதையோட்டத்துடனும் போகும் அந்தக் கதை கிட்டத்தட்ட நம் தமிழ் சினிமா மாதிரி தான். ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் வாசித்த புத்தகம் அது. உண்மையைச் சொல்வதானால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கல்லூரிகளின் பெயர்கள் தொடங்கி, பல விசயங்கள் எனக்குப் புதிது. ஆனாலும், அந்தப் புத்தகம் நான் ரசித்துப் படித்த கதைகளில் ஒன்றாகிவிட்டது. லவ் ஸ்டோரியும் சரி, […]
Read the rest of ACTS OF FAITH - நம்பிக்கைகளின் செயல்கள்.