pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

ஒரு வருட பாக்கி..

இங்கே வந்ததிலிருந்து ஒரு வருடமாக பார்த்த பல படங்களைப் பற்றி அன்றன்றைக்கு ஏதாவது எழுதி வைக்கும் பழக்கமுண்டு. சிலவற்றை மேலும் மெருகூட்டி தனி பதிவாக இட எண்ணி வைத்திருந்தேன்.. ஆனால், இப்படியே போனால் படம் பார்த்ததே கூட மறந்து போய்விடும் என்று தோன்றிவிட அவற்றை அப்படியே ஒன்று சேர்த்து இங்கு.
The Diary of Anne Frank
ஒரு படம் பார்த்த அன்று நிம்மதியான தூக்கம் காணாமல் போயிருக்கிறதா? அது போன்ற […]

Read the rest of ஒரு வருட பாக்கி..

பிரகாஷுக்கு நன்றி

இப்பவெல்லாம் படம் பார்க்க அவ்வளவு நேரம் இருப்பதில்லை, ஆனா சின்ன வயதில் அதாவது 2000வது வருடம்வரை, அதற்கு முன்னால் வெளியான எல்லா படங்களையும் பார்த்திருப்பேன் என்றே நினைக்கிறேன். எத்தனை மொக்கை படமாக இருந்தாலும் சின்னத்திரையில் வரும் எல்லா குப்பையையும் படிக்கிற காலத்தில் பார்த்திருக்கிறேன். சீரியல்கள் பார்க்கும் ஆர்வம் குறைவு என்பதால் படம் பார்ப்பது பிடித்த பொழுதுபோக்கு. சில படங்களை என் அம்மா ரொம்ப அதிக சோகம் என்று தடை செய்திருந்தார்கள் (துலாபாரம் போல) அவற்றைக் கூட அவர் […]

Read the rest of பிரகாஷுக்கு நன்றி

ரயிலோடு உறவாடி..

ரயில் என்றாலே ஒரு மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிடுகிறது. இன்றைக்கும் ரயிலைப் பார்த்தால் சின்னக் குழந்தை மாதிரி கடைசி பெட்டிவரை பார்த்துக் களிப்பது ஒரு பழக்கம். நான் பிறந்த புதிதில் எங்கள் வீடு மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்தது. முதல் மாடி பால்கனியிலிருந்து ரயில் பார்ப்பது என்னுடைய சிறு வயது பொழுதுபோக்குகளில் முதன்மையானது.
பாட்டி இடுப்பிலேறி ரயில் பார்த்துக் கொண்டே உணவுண்ட நாட்கள் தொடங்கி மாமா மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்த போது அவரின் காலைச் சுற்றிக் […]

Read the rest of ரயிலோடு உறவாடி..