எட்டு ஒன்பது பத்து
1. நான் பதிவுகளுக்கு வரும் போது நாலு விளையாட்டு ஓடிக் கொண்டிருந்தது. நாலு விளையாட்டால் எனக்குத் தெரிந்த ஆகப் பெரிய நன்மை, புதுப் புது தள முகவரிகளை அதன்மூலம் பெற முடிந்தது.. அப்புறம் பொறுமையாகத் தான் தமிழ்மணம் போன்ற திரட்டிகளைக் கண்டுபிடித்தேன்.
2. அப்புறம் யாரோ ஆறு விளையாட்டு ஒன்றை ஆரம்பித்தார்கள். ஆறு விளையாட்டின் போது வழக்கம் போல ரணகளமாக இருந்த பதிவுலகம் மெல்ல இயல்புக்குத் திரும்பியது. (இங்க இயல்பே அதானேங்கிறீங்களா?
)
3. ஆறுக்கும் நாலுக்கும் நடுவே ஐந்து இருப்பது ஒரு கிறுக்குத்தனம் என்று யோசித்ததன் விளைவாகவோ என்னவோ, ‘நான் ஒரு கிறுக்கு’ சங்கிலி தொடங்கியது. பலரின் இன்னொரு பக்கத்தைக் காட்டிய அந்தச் சங்கிலியிலேயே எழுதாமல் விட்டுவிடுவோமா என்று யோசித்தேன். அப்புறம் நல்ல விசயங்கள் எழுதச் சொன்ன போது எழுதிவிட்டு, கிறுக்குத்தனத்தைப் பற்றிச் சொல்லாமல் மறைப்பது அநியாயமாக பட்டதால் அதை எழுதிவிட்டேன்.
4. அடுத்து பிரேமலதா புத்தகங்கள் பத்தி எழுதச் சொன்னாங்க.. எத்தனை புத்தகம்னு கணக்கு விட்டுப் போச்சு.. தகவல் தேடி எடுத்ததும் அதையும் சேர்க்கிறேன்.. இதற்குப் பல நாள் முன்னாலேயே சிவபாலன் புத்தக அலமாரி குறித்து எழுதச் சொல்லி இருந்தார். புத்தகங்கள் பற்றி எல்லாம் நந்தா, லட்சுமி, ஆசிப் போல, அழகாக சொல்லத் தெரியாத காரணத்தால் அடங்கியே இருந்தேன்.. முடிந்தால் சீக்கிரமே இந்த புத்தகச்சங்கிலியை இட வேண்டும்.
5. பார்த்தில், கேட்டதில், படித்ததில் ரசித்ததுன்னு ஒரு சங்கிலி ஓடிச்சு, மோகன்தாஸ் புண்ணியத்தில்.. அதில் ஒரு ரெண்டு ரெண்டு கண்டுபிடிச்சி எழுதசொல தாவு தீர்ந்து போச்சு..
6. அப்புறம் சுடர் சுற்றிக் கொண்டு வந்தது. சுடர் ஓரளவுக்கு நிறைவளித்த தொடர்பதிவு.
7. எல்லாத்துக்கும் முன்னால், மதுமிதா ஏதோ ஆராய்ச்சிக்காக சொந்தக்கதை எழுதச் சொன்னாங்க.. சரி, ஒரு வளரும் எழுத்தாளரை(;)) இப்பவே பேட்டி கண்டுக்கிறாங்க போலன்னு போனாப் போகுதுன்னு எழுதிக் கொடுத்தேன்.
8. இதோ, இந்த எட்டு தாங்க..
9. எட்டுக்கும் எனக்கும் பயங்கர ராசி.. கல்லூரியில் படிக்கும் போது நண்பன் ஒருவனுடன் அவ்வப்போது சின்னச் சின்ன விசயங்களுக்கு பழிச்சண்டை போட்டுக் கொண்டிருப்பேன். கொஞ்ச நாள் லீவில் ஊருக்குப் போய் வந்து என்னை அழைத்து கேட்டான்.. ‘பூர்ணா, உன் பிறந்த நாள் 8, 17, 26 இது மூணுல ஒண்ணு தானே?!’ என்று..
‘ஆமாம்.. அதுக்கென்ன?’ என்றேன் நான்.
உடனே, ‘பார்த்தியா, சொன்னேன்ல? ‘ என்று தன் நண்பர்களிடம் கெத்தாக கேட்டான்..
நான் பொறுக்காமல், ‘ஆமாம், மூணு நாலு நம்பர் சொன்னா ஏதாவது ஒண்ணு சரியாத்தானே இருக்கும்? இதுல என்ன பெருமை இருக்கு?!’ என்று எதிர்க்கேள்வி போட்டேன்..
‘இல்ல பூர்ணா, அது ஒரு கலை’ என்று சொல்லி விளக்க ஆரம்பித்தான். பரம்பரை ஜோசிய குடும்பமான அவன் வீட்டில், இந்த முறை போனபோது, குலப் பெருமையைக் ‘காப்பாற்ற’ எண்ஜோசியம் கற்றுத் தந்தார்களாம்! அப்படி கணித்ததில், என்னுடையது போன்ற குணாதிசயம் கொண்டவர்கள் 8இல் தான் பிறந்திருப்பார்கள் என்று கண்டுகொண்டானாம். அதான் 8, 17, 26 ஆம். அதிலும், நான் -8ஆம்.. அவனுடன் (என்னுடனும்) ஓரளவுக்கு ராசியாக பேசும் தோழி 8ஆக இருந்தாலும், +8ஆம்.. அதான் அதிகம் சண்டை போடாமல் இருக்கிறாளாம்..
அடப் போங்கப்பா! என்று அத்துடன் அவனோடு வம்பு செய்வதை விட்டு விட்டேன்..
10. ராசி எண்ணோ ஓசி எண்ணோ, எங்கள் வீட்டு வண்டிகள் எல்லாம் எப்படியாவது எட்டு கூட்டுத் தொகையோடு தான் வந்து சேருகின்றன.. மீண்டும் விற்கும் போது இந்த எட்டு பெரிய தொல்லை என்பார்கள்.. Re-sale value மிகவும் குறைவு.. ஆனால், வண்டியின் முழு ஆயுளுக்கும் ஓட்டி, அப்புறம் யாருக்காவது சும்மாவே கொடுத்து விடுவதால், எங்களுக்கு அப்படி விற்பனையிலும் பெரிய பிரச்சனை வந்ததில்லை
அதென்ன எட்டு எழுதச் சொன்னால் பத்து எழுதிருக்கேன்னு பார்க்கிறீங்களா? ஆமாம், எட்டுக்கப்புறம், ஒன்பது, பத்து என்று தானே சங்கிலித் தொடர் செய்யச் சொல்லப் போறீங்க? அல்லாத்துக்கும் சேர்த்து இப்பவே எழுதிட்டேன்.. அடுத்த முறை எழுத வேணாம்ல..
ரொம்ப அறுவையாக தெரிந்திருந்தால், பாய வேண்டியது என்னை எழுதச் சொன்ன இவங்க பேர்ல தான் :
1. பாஸ்டன் பாலா
2. விக்கி
3. We the people ஜெய்
4. அய்யனார்
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
//8. இதோ, இந்த எட்டு தாங்க.. //
ம்ஹூம் ஆசிஃப் அளவுக்கு எழுதாம விட்டீங்களே.
அப்புறம் +8, -8 எப்படிக் கண்டுபிடிக்கறதுன்னு உங்க நண்பர்ட்ட கேட்டுச்சொல்லுங்க. ஏன்னா என் பிறந்தநாளும் அந்த 3ல் ஒண்ணுதான்
—பாய வேண்டியது என்னை எழுதச் சொன்ன இவங்க பேர்ல தான—
:))
//அல்லாத்துக்கும் சேர்த்து இப்பவே எழுதிட்டேன்..//
அது சரி..
அப்ப மத்த சாமீகளுக்காக திரும்பவும் இதே 8-டோட வருவீங்கன்னு சொல்லுறீங்களா..
அட! தேவுடா! எங்களை காப்பாத்தூஊஊஊஊஊஊ…
:))
இதுக்கே நொந்துக்கலாமா? நான் உங்களை 11, 12, 13…முடிவிலி விளையாட அழைக்கிறேன்
எட்டு விளையாட்டு விதிப்படி ஒரு 3 குறிப்புகளை கடைசில போடணும். இன்னும் 8 பேர கூப்பிடணும். இந்த 2 விதிகளையும் மீறினதால இத எட்டு கட்டுரையா எடுத்தக்கமுடியாதுன்னு ஏட்டு சொல்றார்..
பொன்ஸ் இது அழுகுணி ஆட்டம் ..செல்லாது..செல்லாது மறுபடி ஆடுங்க
[…] எழுதிய இந்தத் தொடர்விளையாட்டுக்குப் பின், […]