பதிவர் பட்டறை - என் பார்வை..
எங்க அக்கா (பெரியம்மா மகள்) கல்யாணம் நடந்து முடிந்த அன்று இருந்தது போன்ற, நிறைவு, மகிழ்ச்சி, சலசலப்பு, களைப்பு, நிம்மதி, கூட இன்னும் கூட நல்லா செய்திருக்கலாமே என்ற ஏக்கமும் நிறைந்திருக்கிறது… சனி மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புகையில் அம்மா கையால் குடித்த தேநீர் தான் ஆர அமர சாப்பிட்டது.. அதற்கு அப்புறம் இன்று காலை வரை ஓரே ஓட்டம் தான்..
வாங்க வேண்டிய டேப், பிசின், கத்திரிக்கோல், ஸ்டேப்ளர், சார்ட் பேப்பர் என்று லக்கி மற்றும் இவானுக்குப் பட்டியல் போட்டுக் கொடுத்து அவர்களை அனுப்பி விட்டு, feedback formகளுக்கான கேள்விகளையும், ஒழுங்கையும் டிசைன் செய்து நிமிருகையில் குறுவட்டுக்கள் வந்திறங்கின. இரண்டாம் வகுப்புக்குப் பிறகு ஒன்றிலிருந்து இருநூற்றைம்பது எண்ணியது இப்போதான் முதல் முறை
வாங்கி வைத்துவிட்டு பார்த்தால் பேனர்கள் வந்திறங்கின. பிரித்துச் சரிபார்த்துவிட்டு அவற்றை ஆட்டோவில் போட்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒழுங்கு செய்திருந்த பின்னூட்ட பாரத்தை அச்செடுக்க பதிப்பகம் போனேன்.
‘கிளம்பும் நேரம் வரீங்களே’, என்று அலுத்துக் கொண்டே அச்சிட்டுக் கொடுத்தார்கள் மாணவர் மறுபதிப்பு அச்சகத்தில்.. பிரதிகளை எடுத்துக் கொண்டு பல்கலைக்கழகம் வந்த போது,
1. கணினிக்கள் தயாராக இருந்தன. ஒவ்வொன்றாக சோதனை செய்து கொண்டிருந்தார்கள் ஜேகேவும் வினையூக்கியும்
2. செல்லா, நந்தா, அருள்குமார், ஜெய், சிவகுமார், சுந்தர் எல்லாம் சேர்ந்து மறுநாள் கொடுக்க வேண்டிய பைகளைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்
3. பாலாவும் லக்கியும் குறுவட்டுகளையும் இன்னும் விடுபட்ட பேனர் முதலானவற்றையும் எடுத்து வந்துகொண்டிருந்தனர்.
4. விக்கி அடுத்த நாளுக்கான கலந்துரையாடல் திட்டத்தை மாற்றி, மறுசீரமைத்துக் கொண்டிருந்தார். புதிய பேச்சாளர்களிடமும் பேசி உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்
என் பங்குக்கு நானும் சில கணினிக்களைச் சோதித்து பார்த்து, இகலப்பை, பையர்பாக்ஸ் என்று மென்பொருள் நிறுவிவிட்டு கிளம்பி வீடு சேர்ந்த போதே பதினொன்றாகிவிட்டது.. செல்லா முதலானோர் கிளம்ப இன்னும் தாமதமாகிவிட்டதாக கேள்வி…
காலை எழும்போதே ஜெயா போன் செய்து என் பொறுப்பில் நான் எடுத்து வர வேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டார். ஜேகே தன் பங்குக்கு, ‘நீங்க வராட்டாலும் பரவாயில்ல, அந்த எக்ஸ்டெசன் கேபிளை அனுப்பி வச்சிடுங்க’ என்று பீதியைக் கிளப்பினார்..
ஏழரைக்கே கணினிகள் இணைப்புகளுடன் தயாராக இருந்தன. வினையூக்கி இன்னமும் சோதனை செய்து கொண்டிருந்தார். பரிமேலழகர் அறையில் செய்முறைப் பயிற்சியும், திருவள்ளுவர் அறையில் செய்முறை விளக்கமும் என்று எழுதி ஒட்டிவிட்டு, நிகழ்ச்சி நிரலையும் எழுதி வைத்தோம். கிழக்குப் பதிப்பகத்தின் ப்ரோஜக்டரை நிறுவி சோதித்தோம். இதற்குப் பிறகு கீழே அரங்கத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லாமல் போய்விட்டது எனலாம்..
முதல் அமர்வு தகடூர் கோபி தமிழ் குறியேற்றங்கள், விசைப்பலகை, போன்றவற்றை விளக்கினார். அப்போதே திருவள்ளுவர் அறை, இடம் கொள்ளாத கூட்டமாக திரளத் தொடங்கிவிட்டது. நின்றபடி எல்லாம் கேட்டார்கள் மாணவர்கள்.
அடுத்த அமர்வாக வந்த தமிழியின் ப்ளாக்கர், வோர்டுபிரஸ் விளக்கத்திற்கும் கூட்டம் அலைமோதியது. ஆர்வமாக கேட்டவர்கள், மிகவும் உதவியாக இருந்தது என்றும் சொன்னார்கள். ‘ஏங்க, அவரு, தமிழி பேராசிரியருங்களா? இத்தனை நல்லா எடுக்கிறாரே!’ என்று ஒருவர் என்னிடம் வந்து கேட்டுவிட்டுப் போனார்!
HTML அறிமுகம் கொடுக்க வந்த செந்தழல் ரவி, HTML மட்டுமின்றி ஒரு அடிப்படைக் கணிமை தொடங்கி வலைபதிதல் வரை மிகவும் விரிவாகவே சொல்லிக் கொடுத்துவிட்டார். செல்லாவின் ஒலி ஒளிப்பதிவுகள், கோபியின் எழுத்துரு மாற்றப் பயிற்சி என்று கேன்சலான பிற அமர்வுகளின் நேரமும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், ரவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்து கேட்டனர் மாணவர்கள். இடையில் உணவு இடைவேளை எல்லாம் இருந்தும், தலைவர் தொடர்ச்சி விட்டுப் போகாமல் வகுப்பெடுத்ததாக கேள்வி!
காலை சென்னை வந்திறங்கி வூட்டம்மாவைக் கூட பார்க்கப் போகாமல் நேரே பதிவர் பட்டறைக்கு வந்த பெனாத்தல் சுரேஷ், பிளாஷ் அறிமுகம் கொடுத்தார். செய்முறை விளக்க வகுப்புகளில் இறுதி வகுப்பாக அமைந்த இந்த நிகழ்வையும் மக்கள் அதி ஆர்வத்துடன் கவனித்து கேட்டார்கள். மற்ற வகுப்புகளைவிட இந்த வகுப்புக்கு கூட்டம் அதிகம். மேசைகள் ரொம்பிப் போக, தரையில் அமர்ந்தெல்லாம் பார்த்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..
சுழற்சி முறையில், வினையூக்கி, நான், ஜேகே, சுந்தர், ஜெயா, கோபி, ஸ்ரினிவாசன் என்ற கடலூர்க்காரர் எல்லாரும் பரிமேலழகர் அறையில் பதிவு தொடங்கிக் கொடுப்பது, ஜிமெயில் கணக்கு, தமிழ்99 தட்டச்சு என்று ஆரம்ப பாடம் எடுத்தோம். கற்றுக் கொண்ட சில மாணவர்கள், தாமே நண்பர்களுக்குச் சொல்லிக் கொடுத்த போது நிறைவாக இருந்தது. டோண்டு சார் கூட யாருக்கோ பதிவு தொடங்கச் சொல்லிக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். தேசிகனும் சிலருக்கு பதிவுகள் தொடங்கிக் கொடுத்தார்.
கலந்துரையாடல் அரங்கமும், செய்முறை விளக்க வகுப்பும் - இரண்டுமே போரடிப்பதாக தோன்றம் நபர்கள் வந்து கற்றுக் கொள்ளவே செய்முறை பயிற்சி அறையான பரிமேலழகர் அறையை வைத்திருந்தோம். மதியத்திற்கு மேல் பரிமேலழகரில் கூட்டம் வெகுவாக குறைந்திருந்ததைப் பார்த்தபோது மகிழ்ச்சியாகவே இருந்தது.. மக்கள் கலந்துரையாடலையும், செய்முறை விளக்கத்தையும் ரசித்துக் கேட்பதற்கான அறிகுறியல்லவா அது?!
மாலை வலைப்பதிவுகள் சார்ந்த புதிய முயற்சிகள் பற்றி அரை மணியில் தொகுத்து, அடுத்த அரை மணியில் அறிமுகம் கொடுத்து என்று அதுவும் ஒரு த்ரில்லாகி விட்டது.. எழுத்துரு மாற்றப் பயிற்சி, ஏற்கனவே தமிழிணையத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் என்றுவிட்டார் கோபி. கடைசியாக அதில் ஆர்வம் காட்டிய எனக்கும், க்ருபாசங்கருக்கும் மட்டும் தனி பயிற்சி வகுப்பாக exclusiveஆக சொல்லிக் கொடுத்தார் கோபி..
சுவையான சில:
* லக்கியின் புகைப்படம் சீர்ப்படுத்துதல் வகுப்பை ஆர்வமாக விரும்பிய டோண்டு சார் மதியத்திற்கு மேல் கிளம்பிவிட்ட படியால் அந்த வகுப்பு நடத்தும் ஆர்வம் லக்கிக்கும் குறைந்துவிட்டது.
* மேலிருந்து கீழே வந்து, மீண்டும் மேலே ஓடிக் கொண்டிருந்தபோது, ‘என்னம்மா, நின்னு பேச மாட்டேங்கறீங்க!’ என்றார் அருணா ஸ்ரினிவாசன். ‘அவங்க கல்யாண வீட்டுக்காரங்க.. அப்படித்தான் பரபரப்பா இருப்பாங்க’ என்று பதில் சொல்லி கலாய்த்தார் காசி
* புதுவையிலிருந்து இரா. சுகுமாறன் வந்திருந்தார்.
* ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் - இவற்றில் செய்தியைப் பார்த்துவிட்டும் சிலர் வந்திருந்தார்கள். அதிலும் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் மாலதி பதிவுகளைக் கவனிப்பதாக சொன்னார்.
* நமது கல்வித்திட்டம் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ரிடையர்டு ஆசிரியர் ஒருவர் தம் மனைவியுடன் வந்திருந்தார். பதிவுகள் தொடங்க ரொம்பவே ஆவலாக இருந்தார்
* நாளிதழ்களில் எழுதும் மற்றுமொரு எழுத்தாளர், முதியவர், வலைப்பதிவுகள் குறித்து தெரிந்து கொள்ள மிக்க ஆவலுடன் வந்திருந்தார்
* ஆதரவற்றவர்களுக்கு உதவும் ஆங்கிலத் தளம் ஒன்றில் அங்கமாக இருக்கும் பெண் ஒருவர் தமிழில் இதை எப்படிச் செய்வது? என்று கேட்டுக் கொண்டு வந்திருந்தார்
* மாணவ, மாணவிகள் அதீத ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்கள்.. காலை சிஃபி இணைப்பு மிகவும் மோசமாக இருந்த போதும், கிட்டத்தட்ட 50 புதிய வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள் உருவாக்கி இருப்போம்..
* சி என் என், விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ், உண்மை, ஜெயா டீவி நிருபர்கள் வந்தது மட்டுமே எனக்குத் தெரியும்.. வேறு யார் யார் வந்தார்கள் என்று கலந்து கொண்டவர்கள் சொன்னால் தான் உண்டு
இப்போதைக்கு இவ்வளவு தான்.. மற்றவை அவ்வப்போது நினைவுக்கு வரும்போது எழுதுகிறேன்…
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
அடெ! இவ்வளவு கவனிச்சீங்களா..? பரவாயில்லை.
மிக உபயோகமாகவும், நன்றாகவும் இருந்தது பட்டறை நிகழ்வுகள். தங்களின் பெருமுயற்சிக்கும், உழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றி!
வெயிலான், உங்களைப் பார்க்கணும்னு நினைச்சிட்டிருந்தேனே.. எங்க இருந்தீங்க?!
[…] 3, இட்லி வடை, ஜெய்சங்கர், ஓசை செல்லா, பொன்ஸ், […]
என்ன எப்படி உங்களுக்கு தெரியப்போகுதுன்னு நினைச்சுட்டேன். திரும்ப சந்தர்ப்பம் வரும் போது சந்திக்கலாம்.
Poorna, pattarai was very informative and useful. I want to start a blog and write about my experience at pattarai.Thanks for remembering me and mentioning here in your post.
Hats off to you and all others involved in organising such an event.
Malathi
மேல் மாடி அரங்குகளில் நீங்கள் வகுப்பு எடுத்தது தெரியாமல் போய் விட்டது.சந்திக்க இயலாததற்கு வருந்துகிறேன்.குழு உறுப்பினர் ஒவ்வொருவரின் அயராத உழைப்பு பட்டறை அரங்கில் தெரிந்தது.ஊர் கூடித் தேர் இழுத்திருக்கிறீர்கள்.மனமார்ந்த பாராட்டுக்கள்.
வெயிலான்,
பதிவர் வட்டம் ஒரு குடும்பம் மாதிரி தானேங்க.. எப்படியாவது தெரிஞ்சிடும்.. அதிலும் எப்பவுமே என் recent readersஇல் இருக்கும், பா.க.ச உறுப்பினரான உங்களைத் தெரியாம போயிடுமா
மாலதி,
நினைவா இந்தப் பதிவுக்கு வந்து படிக்கிறதுக்கு நானும் உங்களுக்கு நன்றி சொல்லணும்ங்க.. சீக்கிரமே பதிவு தொடங்கிடுங்க.. இணைய இணைப்பு மட்டும் வேகமா இருந்திருந்தா நேற்றே செய்திருக்கலாம்.. ம்ஹூம்..
சர்தார்,
நீங்க வந்திருப்பீங்கன்னு நானும் எதிர்பார்த்தேன்.. சிவாவிடம் கேட்க விட்டுப் போச்சு.. அடுத்தமுறை மறக்காம சந்திப்போம்..
கல்க்கிட்டீங்க!!. வாழ்த்துக்கள். IBNல பேட்டி பாத்தேன்.
நன்றி! பாராட்டுகள்!
>
ஐயோ! நான் உறுப்பினர் இல்லீங்க
பாவங்க அவரு! விட்டுறுங்கன்னு நானும் எல்லா பக்கமும் போய் பின்னூட்டம் போட்டுட்டிருக்கேன்.
இருந்தும், நீங்கல்லாம் சொல்லி சொல்லியே என்னை உறுப்பினராக்கீட்டீங்க.
IBN செய்தியோட சுட்டி இருந்தால் அனுப்புங்க.
IBN செய்தி பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது.
அனைத்து நண்பர்களின் அயராத உழைப்பால் பதிவர் பட்டறை பெரும் வெற்றியடைந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. தவறவிட்டு விட்டோமே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. எப்படியும் அடுத்த முறையாவது கலந்துக்கொள்கிறேன்.
அனைவருக்கும் பாராட்டுக்கள்.
///
:)
:):):) ///
எங்க தலயப்பத்தி சொன்னா உங்களுக்கு என்ன இப்படி ஒரு சிரிப்பு செல்வா!
அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் பொன்ஸ்…..
முயற்சிகளுக்கு மிக்க நன்றி.
அப்பறம், எவ்வளவு எழுத்துரு மாத்தி இருக்கீங்க?
க்ருபா
Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr,
பட்டறை பதிவையும் சங்கத்துக்கு ஆள் சேர்க்கும் பதிவாக மாற்றும், பொன்ஸ், வினையூக்கி, வெயிலானுக்கு… :((
தல,
இன்னொரு ஆள விட்டுட்டீங்களே! சங்கச் செயலாளர். நாமக்கல் சிபி, எனக்கு உறுப்பினர் அட்டை கொடுக்க மறந்ததாக ரொம்ப வருத்தப்பட்டிருக்கார்.
அவருக்கும் ஒரு கிர்………….. கொடுங்க. வேற என்ன பண்ணமுடியும். ரொம்பப் பாவம் நீங்க.
Hi
Have u seen ur ibn interview
if not
visit my blog post and click from there for the ibn telecast
http://coolsrini.blogspot.com/2007/08/tamil-blog-camp.html
i m sure u might have enjoyed the interview clippings
its a great job done by you people for making the blog camp a roaring success.
cuddalore srinivasan
பாராட்டுக்கள் ஆசிரியர்களுக்கும், மாணாக்கர்களுக்கும், ஆர்கனைசர்களுக்கும், மற்றும் இந்த பதிவெழுதிய பொன்ஸ்க்கும். Hats off!
நல்ல தொகுப்பு.
மிக்க நன்றி.
/* சனி மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புகையில் அம்மா கையால் குடித்த தேநீர் தான் ஆர அமர சாப்பிட்டது.. அதற்கு அப்புறம் இன்று காலை வரை ஓரே ஓட்டம் தான்.. */
நீங்கள் அனைவரும் அயராது உழைத்திருக்கிறீர்கள். இப்படியானதொரு நிகழ்வை நடத்தி முடிப்பதென்பது மிகவும் சிரமமான விடயம்.
தமிழுக்கும், தமிழ்ச்சமூகத்திற்கும் நீங்களும் இந்தப் பட்டறையைத் திறம்பட நடத்தி முடித்த அனைவரும் செய்த பணிக்கு உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களும் நன்றிக் கடமைப்பட்டுள்ளார்கள். மிக்க நன்றி.
பூர்ணா,
செந்தமிழ்சோலைக்கு தாங்கள் வருகை தந்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி.
[…] 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. Share […]
சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
[…] 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. […]
[…] 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. […]
Hello webmaster…. i was searching for chennai india map and i came across your post and it is definitely the most sensible thing i have seen in a long time, and in my opinion you got something good going here, i have to get my friends to subscribe to your post about ிவர் பட்டறை - என் பார்வை.. | pookri.com.
Hello…Man i love reading your blog, interesting posts ! it was a great Saturday .