pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

பதிந்ததில் பிடித்தது

நான் தொடர்ச்சியா பதிவுகள் படிச்சி, எழுதி ரொம்ப காலமாச்சு.. போன முறை, 2006இல் இங்க அமெரிக்கா வந்திருந்த போது, கிட்டத் தட்ட எல்லா நாளும் பதிவுகளோட தான் கழிச்சிருக்கேன். அப்போ தமிழ்ப்பதிவுகளைக் கண்டுபிடிச்ச புதுசு… ஒரு வாரம் ஒரு பதிவர் வீதம் யாராவது ஒரு பதிவரை எடுத்துகிட்டு அவங்க எழுதின கிட்டத் தட்ட எல்லா இடுகைகளையும் படிச்சி முடிக்கிறதை ஒரு முழுநேர தொழிலாவே வச்சிருந்தேன்னு சொல்லலாம்.

இப்ப நிலைமை வேற.. கொஞ்சம் இல்ல, முழுக்கவே ஒதுங்கியாச்சு. யாராவது எப்பவாவது கூப்பிட்டு, “இந்த இடுகையைப் பாரேன்”னு சொன்னால் ஒழிய இந்தப் பக்கம் தலைவச்சி படுக்கிறதில்லை.. ஆனா இன்னுமும் கூட, இங்க பார்க்கிற, பேசற நண்பர்களுக்கு தமிழில் மடல் எழுதி, எழுதும் ‘வித்தை’ காட்டி தமிழ்99, சுரதா எழுத்துரு மாற்றி, யுனிக்கோடுன்னு போட்டு அறுத்து அஞ்சுல ஒருத்தரையாவது தமிழ் மடல்களுக்கு மதம்மாற்றும் முயற்சியை விடலை..

சரி, இந்த வம்பை எல்லாம் விட்ருவோம்.. என்ன சொல்ல வந்தேன்னா, அப்படி ஒதுங்கி இருந்த என்னையும், காட்டாறு யக்காவும், தாத்ஸ் தருமியும் பதிந்ததில் பிடித்தது விளையாட்டுல மறக்காம இழுத்து விட்டுட்டாங்க.. என்னத்த சொல்ல.

கடைசியாக எழுதிய இந்தத் தொடர்விளையாட்டுக்குப் பின், அடுத்தடுத்து எதற்குக் கூப்பிட்டாலும் வரக் கூடாது என்று இருந்தேன்.. ஆனால், ஒரே ஒரு பதிவு என்று நம்ம பேராசிரியர் ஆசைகாட்டியதாலும், பதிவெழுதாமலே வெகுகாலம் ஆகிவிட்டதாலும், சமீபத்தில் செய்த புதுவருட வாழ்த்துக்கள் குளறுபடிக்கப்புறம், எதுவும் எழுதவே சங்கடமாக உணர்ந்ததால், இப்படியாவது தொடங்கலாமே என்றும்….

சரி சரி மேட்டருக்கு வருவோம். 2007இல் நான் எழுதியதில், சில பல மொக்கைகளை விட்டு விட்டுப் பார்த்தால் நாற்பது போல உருப்படிகளாகத் தேறும். இத்தனை இடுகைகளையும் ஒருமுறை பார்த்துவிட்டு எது பிடித்தது என்று சொல்லலாம் என்று முதலில் நினைத்தேன். ஆனால், படிக்கவோ பார்க்கவோ அவசியமின்றி என் இடுகைகள் என்று சொன்னவுடனேயே நினைவுக்கு வருவதும், பளிச்சென்று மனம் நிறைப்பதும், இந்த இடுகை தான்.

உண்மையில் நான் என்ன எதிர்பார்ப்பில் பதிந்தேனோ, அது முழுமையாக நிறைவேறியது இதன் பின்னூட்டங்களில். இதன் பின்விளைவாக வந்த சந்திரவதனாவின் பெற்றோர் சமையலைப் பற்றிய இடுகையும் எனக்குப் பிடித்த இடுகை..

ஆக பேராசிரியரே, நானும் நல்ல பொண்ணு தானே? சர்டிபிகேட்டைச் சீக்கிரம் மடலில் அனுப்பிவுடுங்க…

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

RSS 2.0 | Trackback | Comment

7 Responses to “பதிந்ததில் பிடித்தது”

  1. யெஸ்.பா

    :)

    அதுசரி… அட்டகாசமான பதிவு தான் நினைவுக்கு வருது.


  2. பெற்றொர் சமையலும் சரி..அவர்கள் பர்றிய நினைவும் சரி..நம்மை எப்போதும் தொடர்ந்து வரும் ..


  3. //நானும் நல்ல பொண்ணு தானே?//

    சொன்னாலும் சொல்லாட்டாலும், எழுதினாலும் எழுதாவிட்டாலும் நீங்கள் எப்போதும் நல்ல பிள்ளைதானே!


  4. பொன்ஸ் அக்கா சிரமம் பார்க்காமல் தொடர்ர்ந்து எழுதுங்க !!!! நீங்கள் சன் டிவியில் வந்ததைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன் :)

    http://ponvandu.blogspot.com/2008/01/blog-post_14.html


  5. அட… பார்க்காத பல பதிவுகள்.. நல்ல தொகுப்பு!

    சன் நியூஸ்ல தமிழ் வலைபூவை பற்றிய செய்தி தொகுப்பை பார்த்தேன் (சின்னகுட்டி புண்ணியத்தில்…). எல்லாரும் நல்லாவே பேசியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    தமிழ்ல எப்படி தட்டச்சு பண்றதுனு ஒரு சில நிமிடங்கள் தொகுப்பாளர் ஒதுக்கி இருக்கலாம்..?!

    //அவங்க எழுதின கிட்டத் தட்ட எல்லா இடுகைகளையும் படிச்சி முடிக்கிறதை ஒரு முழுநேர தொழிலாவே வச்சிருந்தேன்னு சொல்லலாம்.
    //
    அட… ;)


  6. will be recorded here shortly
    http://surveysan.blogspot.com/2008/01/2007.html

  7. காட்டாறு

    டேக் பண்ண மட்டும் தெரியும் அப்படின்னு இருக்கலைங்க. உங்க மத்த பதிவெல்லாம் படிச்சிட்டு திரும்ப இந்த பக்கம் வாரதுக்குள்ள… ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாஆஆஆ… இவ்ளோ பதிவு எழுதியிருக்கீங்களா? எவ்ளோ எனர்ஜி. அப்பப்பா. கண்டிப்பா மேலும் எழுதுங்க பொன்ஸ். புதுசா(?) வந்திருக்கிற நாங்க இன்னும் எழுத உங்களைப் போல உள்ள பெரியவங்க(!) எழுதினா தானே ஊக்கப் படுத்துறதா இருக்கும்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>