pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

பிரகாஷுக்கு நன்றி

இப்பவெல்லாம் படம் பார்க்க அவ்வளவு நேரம் இருப்பதில்லை, ஆனா சின்ன வயதில் அதாவது 2000வது வருடம்வரை, அதற்கு முன்னால் வெளியான எல்லா படங்களையும் பார்த்திருப்பேன் என்றே நினைக்கிறேன். எத்தனை மொக்கை படமாக இருந்தாலும் சின்னத்திரையில் வரும் எல்லா குப்பையையும் படிக்கிற காலத்தில் பார்த்திருக்கிறேன். சீரியல்கள் பார்க்கும் ஆர்வம் குறைவு என்பதால் படம் பார்ப்பது பிடித்த பொழுதுபோக்கு. சில படங்களை என் அம்மா ரொம்ப அதிக சோகம் என்று தடை செய்திருந்தார்கள் (துலாபாரம் போல) அவற்றைக் கூட அவர் இல்லாத நேரத்தில் பார்த்து முடித்திருக்கிறேன்.

ஒரு தரம் அப்பா சேனல் மாற்றிக் கொண்டே வரும்போதில், ஏதோ ஒரு அலைவரிசையில், ஒரே ஒரு ப்ரேம் சின்ன தலையாட்டி பொம்மை ஒன்று ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அது ‘காவியத்தலைவி’ என்று நான் சொல்ல, பாலச்சந்தர் படங்களின் அகராதி என்று தன்னை அதுகாறும் நினைத்திருந்த அப்பாவே அசந்து போய்விட்டார்! அந்த அளவுக்கு தமிழ்ப்படங்களின் encyclopediaவாக இருந்தவள் வேலைக்கு என்று வீட்டைவிட்டு வெளியேறியபின்னர் படம் பார்க்க நேரமோ ஆர்மோ இல்லாமல் போய்விட்டது. இப்போது இந்த ஊருக்கு வந்த பின் கிடைத்த வெற்று நேரத்திலும் இணைய வசதியிலும் தெலுங்குப் படங்கள், பழைய ஆங்கிலப்படங்களின் விக்கி பக்கமாக சீக்கிரமே மாறிவிடுவேன் என்று நினைக்கிறேன்.. அதற்கு முன் பிரகாஷாரின் மீமீயைப் பார்த்ததும் சுட்டுப்போடும் ஆர்வத்தை அடக்க முடியாமல்:

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
பத்து வயதில். நினைவு தெரிந்து முதல் படக் காட்சியாக நினைவிருப்பது புதுமைப்பெண் படத்தில் ரேவதி கோபமாக வரும் காட்சிகள் தாம்

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அறை எண் 308இல் கடவுள். முதல் படத்தை நன்றாக எடுத்த சிம்புதேவன் ஏன் இப்படி அறிவுஜீவித்தனத்துக்கும், பாமர மக்களுக்கான படம் என்பதற்கும் இடையில் குழம்பிப் போய் ஒரு மசாலாவை உருவாக்கிவிட்டார்?!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
புதுமைப் பெண், புன்னகை, மனதில் உறுதி வேண்டும், அவள் ஒரு தொடர்கதை

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நான் எல்லாம் அண்ணன் விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்ச காலத்துலயே அரசியலில் குழந்தையாக்கும் :)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
அபூர்வ சகோதரர்களின் குள்ள அப்பு முதல் கொலை செய்யும் விளையாட்டு. அந்த பந்து எங்கிருந்தோ எங்கோ வந்து கடைசியாக அம்பெறிவதை இன்று பார்த்தாலும் வியப்பதுண்டு

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வாசித்ததுண்டு - பெரிசா ஒண்ணுமில்லை.. ஆ.வி, குமுதம்ல வருவதை மூன்று வருடம் முன்பு வரை வாசித்துக் கொண்டிருந்தேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?
நல்லா இருக்கு. புதுசு புதுசாத் தான் செய்யறாங்க.. ஆனா நல்லாவே காப்பி அடிக்கிறாங்க.. ராசாவுக்கு அப்புறம் எனக்கு யுவன் பிடிக்கும், இப்பப்ப ஹாரிஸ் கூட நல்ல நல்ல பாடல்களாத் தான் (பிறமொழியிலிருந்து) தமிழுக்கு அறிமுகப்படுத்தறார். நல்ல கவிதையைப் பாடலாக்க வேண்டுமென்றால் வித்யாசாகரை மிஞ்ச யாருமில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலம், இந்தி, தெலுங்கு எல்லாம் தேர்ந்தெடுத்த படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் எல்லாம் கமர்ஷியல் தான். அதிகம் தாக்கிய படங்கள் : Cars, Beyond those Gates, The Prize winner of Defiance, The Dreamer, Woh Lamhe(Hindi), Field of Dreams, Godavari (Telugu)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடியா படம் பார்க்கிறதைத் தவிர ஒரு தொடர்பும் இல்லை :-)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லா இருக்கு. சினிமாவைச் சினிமாவாக பார்க்க சமூகத்துக்குக் கற்றுக் கொடுப்பதில் தமிழ்ச்சினிமாவுக்கும் பங்கு இருக்க வேண்டும். இன்னும் அதிகமாக நம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியமாக சினிமாவும் மாற வேண்டும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழுக்குப் பெரிய இழப்பாக இருக்கும். தமிழ் ஓரளவுக்கு அரை உயிராகவாவது வாழ்வதே சினிமாக்களில் தான் :-). ஆனால் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை.. சினிமா இல்லைன்னா சீரியல்னு நிம்மதியா இருப்பாங்களா இருக்கும். என்னைப் பொறுத்தவரை, தமிழ்ச் சினிமாவுக்கு வாய்ப்பே இல்லாத பல இடங்களில் இருந்திருக்கிறேன். என்கிட்ட இருக்கும் பழைய பாடல்களைப் பிடுங்காதவரை, சினிமா புதுசா வந்தாலும், வராவிட்டாலும் ஒண்ணுமில்லை :-)

சங்கிலிப் பதிவு என்று பிரகாஷ் ்சொல்லி இருந்தாலும், சங்கிலி ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருப்பதால், நான் இப்படியே தனி வளையமா விட்டுடறேன். அடுத்து கொஞ்ச நாள் முன்னால் மதுமிதா போட்டிருந்த நாவல்கள் குறித்த பதிவும் போடலாம்னு யோசனை இருக்கு.. ஜாக்கிரதை மக்கள்ஸ்…

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

RSS 2.0 | Trackback | Comment

6 Responses to “பிரகாஷுக்கு நன்றி”


  1. அடுத்து கொஞ்ச நாள் முன்னால் மதுமிதா போட்டிருந்த நாவல்கள் குறித்த பதிவும் போடலாம்னு யோசனை இருக்கு.. ஜாக்கிரதை மக்கள்ஸ்//…

    http://nunippul.blogspot.com/2008/10/blog-post.html
    பொன்ஸ், வெற்றிலை பாக்கு வைத்து அழைச்சாச்சு. ஸ்டார்ட் மீசிக் :-)


  2. //அதிகம் தாக்கிய படங்கள் : Cars, Beyond those Gates, The Prize winner of Defiance, The Dreamer, Woh Lamhe(Hindi), Field of Dreams, Godavari (Telugu)
    //
    அடடா இதில் எந்தபடத்தையும் நான் பார்த்ததில்லையே :-(
    குறித்துக்கொண்டு விட்டேன்.

    பதிவு நன்றாக இருந்தது பொன்ஸ்!!

  3. அனந்த்

    அற்புதம்


  4. :)

    குட்.. ஆக்டீவாக மீண்டும் எழுதத்தொடங்கியமைக்கு நன்றி!

  5. madhar2007

    தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது எழுதவும் .


  6. /அடுத்து கொஞ்ச நாள் முன்னால் மதுமிதா போட்டிருந்த நாவல்கள் குறித்த பதிவும் போடலாம்னு யோசனை இருக்கு.. ஜாக்கிரதை மக்கள்ஸ்//…

    http://nunippul.blogspot.com/2008/10/blog-post.html
    பொன்ஸ், வெற்றிலை பாக்கு வைத்து அழைச்சாச்சு. ஸ்டார்ட் மீசிக்

    //

    ரிப்பீட்டே :)

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>